Indian Railways News => Topic started by RailXpert on Jul 15, 2012 - 21:01:21 PM


Title - சென்னை,திருவனந்தபுரம் இடையே  துரந்தோ எக்ஸ்பிரஸ் ஆகஸ்ட் முதல் ஓடும்|- Dinakaran
Posted by : RailXpert on Jul 15, 2012 - 21:01:21 PM

திருவனந்தபுரம் : சென்னை, திருவனந்தபுரம் இடையே துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் அடுத்த மாதம் முதல் இயக்கப்படுகிறது. முக்கிய நகரங்களுக்கு இடையே எங்கும் நிற்காமல் செல்லும் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் சென்னை,திருவனந்தபுரம் இடையே துரந்தோ எக்ஸ்பிரஸ் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மற்ற அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டு விட்ட நிலையில் சென்னை,திருவனந்தபுரம் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் மட்டும் இதுவரை இயக்கப்படவில்லை.

இந்த ரயிலுக்கான பெட்டிகள் வராதது தான் இதற்கு காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில் இந்த ரயிலுக்கான பெட்டிகள் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னைக்கு வந்துள்ளன. இதையடுத்து சென்னை, திருவனந்தபுரம் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க தென்னக ரயில்வே தீர்மானித்துள்ளது. அடுத்த மாதம் (ஆகஸ்ட்) முதல் இந்த ரயில் இயக்கப்படும் என கூறப்படுகிறது. வாரத் தில் 2 முறை இயக்கப்படும் இந்த ரயில் சென்னையிலிருந்து (எண் 22207) செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு திருவனந்தபுரத்தை அடையும்.

திருவனந்தபுரத்திலிருந்து புதன், சனி ஆகிய தினங்களில் இரவு 9.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் (எண் 22208) மறுநாள் காலை 10.15 மணிக்கு சென்னையை அடையும். முற்றிலும் ஏ.சி. ரயிலான இதில் 1 முதல் வகுப்பு, 3 இரண்டாவது வகுப்பு மற்றும் 9 மூன்றாவது வகுப்பு பெட்டிகள் இணைக்கப் பட்டுள்ளன. உணவுக்கும் சேர்த்து கட்டணம் வசூலிக்கப்படும். முதல் வகுப்புக்கு ரூ.2,400, 2வது வகுப்புக்கு ரூ.1300, 3வது வகுப்புக்கு ரூ.900 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிரதி எடுக்க
எழுத்தின் அளவு 0